அரசு வேலைவாய்ப்பு செய்தி 7500 -க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
7500 க்கும் மேற்பட்ட குரூப் -B,C கணக்கான புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை SSC தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த வேலைக்கு ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதினர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டு உள்ளன.
இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய். மேலும் பெண்கள் எஸ்சி எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.